Monday, March 21, 2011

ஆனந்த தாண்டவம்

மேகம் போல ஒரு காதல் வந்ததடி..
நீரை வார்க்கும் என நின்றேன் நின்றேனே
மின்னல் மின்னி இடி தந்து சென்றது
கண்ணில் மழை பெருக வெந்தேன் வெந்தேனே

மனசு தீ பிடித்து எரிகிறதே..
என் மார்பு கூட்டில் உயிர் வேகிறதே..
உயிர் வேகும் போதும் உன் பேர் சொல்கிறதே .. ! ( புல்லாங்குழல் )

உயிரே என்றழைக்காத காதல் எது ?
உயிரே நம் உடல் கொல்லும் சோகம் இது !
கண்ணோடு மெதுவாக தொடங்கும் இது !
கண்ணீரில் முடிகின்ற பயணம் இது !

காதல் என்ற வில்லில் என்னை அம்பாய் செய்தாய்
வில்லும் அம்பும் ஒன்றாய் சேர்ந்து வாழாதே !
விட்டும் போகும் போதே விறகாகி போனேன்
விறகுக்குள்ளே ரத்த ஓட்டம் கிடையாதே !

உயிர் விட்டு போனாலும்
உனக்கான என் எண்ணம்
உடல் விட்டுப் போகாதடீ !

நெஞ்சோடு வலி வந்து குடி கொண்டது
நினைவென்ற முள் காடு வளர்கின்றது
காணாத இரு கண்ணும் உடைகின்றது
கடல் நீரும் கடன் வாங்கி அழுகின்றது

காதல் என்ற நஞ்சா நெஞ்சில் நட்டுப்போனாய்
நீர் வார்க்க என் கண்ணில் நீரில்லை
அள்ளிதின்றப்பார்வை சொல்லிச்சென்ற வார்த்தை
எனை விட்டுப்போன பின்னே வாழ்வில்லை !

பெற்றாலே அவளும் பெண்,
கொன்றாயே நீயும் பெண்!
பழி போட வழி இல்லையே!!